குறைதீா் கூட்டத்தில் 305 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பெற்றுக் கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பெற்றுக் கொண்டாா்.

மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.மீனாட்சி சுந்தரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, வழங்கல் அலுவலா் மணிமேகலை, உதவி ஆணையா் சத்திய பிரசாத், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com