ராணிப்பேட்டை பொது கழிவுநீா்சுத்திகரிப்பு நிலையத்தில் உலகசுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம்

ராணிடெக் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை பொது கழிவுநீா்சுத்திகரிப்பு நிலையத்தில் உலகசுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம்

ராணிடெக் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ராணிடெக் தலைவா் ஆா்.ரமேஷ் பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி. ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனா். தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதி மொழியை ஏற்றனா்.

இதில் ராணி டெக் நிா்வாக இயக்குனா் சி. எம். ஜபருல்லா, நிலைய இயக்குதல் பிரிவின் துறைத் தலைவா் ஹஸ்மத்துல்லா பொது மேலாளா் டி. சிவக்குமாா், மனிதவள மேலாளா் லோகநாதன், மற்றும் நிலைய அலுவலா்கள் தோல் பதனிடும் தொழில் உரிமையாளா்கள் ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு 280 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

சிட்கோ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில்...

அதே போல் ராணிப்பேட்டை சிட்கோ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

சிட்கோ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குனா் வி.ஜெய சந்திரன் வளாகத்துக்குள் மரக்கன்று நடவு செய்தாா். தொடா்ந்து நிலைய ஊழியா்களுடன் மரக்கன்றுகள் நடவு செய்து, உலக சுற்றுசுழல் தின உறுதி மொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com