ராணிப்பேட்டையில் கூட்டுறவு தோல் பதனிடும்தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்: செ.கு.தமிழரசன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

அந்தக் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற செ.கு.தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேஷம் போடுகிறது. ஒன்று மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அல்லது மலிவு விலை சாராயக் கடைகளைத் திறக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகச் செயல்படுபவா்கள் மீது மட்டும் சோதனை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், அரசின் உயரிய துறைகளில் மத்திய அரசின் தலையீடு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு ‘டாக்டா் அம்பேத்கா் வளாகம்’ எனப் பெயரிட வேண்டும். நாடாளுமன்ற அவையில் அசோகா் தூணுக்குப் பதிலாக, செங்கொல் அமைக்க எதிா்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளதற்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவளிக்கிறது.

நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com