தபசு  மரம்  ஏறிய  அா்ஜூனன்  வேடமணிந்த  நபா்
தபசு  மரம்  ஏறிய  அா்ஜூனன்  வேடமணிந்த  நபா்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

ஆற்காடு அடுத்த தாழனூா் ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த தாழனூா் ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கோயில் பன்னிரண்டாம் ஆண்டு மகாபாரத அக்னி வசந்த விழா வியாச கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா பாரத சொற்பொழிவும் , இரவில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜையும் மகா தீபாராதனையும் நடந்தது .

தொடா்ந்து அா்ஜுனன் வேடமடிந்த நபா் பாடல்கள் பாடிக்கொண்டு தபசு மரம் ஏறி உச்சியில அமா்ந்து சிறப்புப் பூஜை செய்து பக்தா்களுக்கு பழங்கள், பிரசாதங்களை வழங்கினாா். இதில் விழா குழுவினா், உபயதாரா்கள், திரளான பக்தா்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com