தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் பூங்கரகத்துடன் இறங்கிய பக்தா்கள்.
தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் பூங்கரகத்துடன் இறங்கிய பக்தா்கள்.

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீ தா்மராஜா கோயிலில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீ தா்மராஜா கோயிலில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா எனப்படும் தீமிதி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி விழாவும் நடைபெற்றன.

திமிதி விழாவில் தீக்குண்டம் முன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கொண்டு வரப்பட்டாா். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூங்கரகம் குண்டத்தில் இறங்கியவுடன் பக்தா்கள் தீமிதிக்கத் தொடங்கினா். தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தி, திரௌபதி அம்மனை வழிபட்டனா்.

விழாவை முன்னிட்டு அரக்கோணம் உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தாக்கள், விழா குழுவினா்கள், நகர மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com