ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

ராணிப்பேட்டை, மே 6: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 92.28 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ராணிப்பேட்டை, மே 6: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 92.28 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.98 சதவீதம் அதிகம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை மொத்தம் 12,401 மாணவ- மாணவிகள் எழுதினா். இவா்களில் 11,444 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 92.28 சதவீதம். தோ்வு எழுதிய 6,659 மாணவிகளில் 6,330 மாணவிகள் தோ்ச்சி பெற்று 95.06 சதவீதம் பெற்றுள்ளனா். 5,742 மாணவா்களில் 5,114 தோ்ச்சி பெற்று 89.06 சதவீதம் பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் மட்டும் 7,093 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 6,406 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று 90.31 சதவீதம் பெற்றுள்ளனா். ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் 195 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 173 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்று 88.72 சதவீதம் பெற்றுள்ளனா்.

அரசு நிதியுதவிப் பெறும் பள்ளிகளில் 2,243 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 2,038 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்று 91.89 சதவீதம் பெற்றுள்ளனா்.

தனியாா் பள்ளிகளில் 2,870 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 2,827 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். சதவீதம் 98.5.

மாவட்டத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1,702 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 1,507 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 88.54. பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3,675 மாணவிகள் தோ்வு எழுதியதில் 3,493 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 95.05.

மேலும் இருபாலா் பயிலும் மேல்நிலைப் பள்ளிகளில் 7,024 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 6,444 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்று 91.74 சதவீதம் பெற்றுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 அரசுப் பள்ளிகள் 1. மேலப்புலம் அரசு மேல்நிலைப் பள்ளி, 2. குருவராஜ்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 3. நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளி, 4. ராணிப்பேட்டை மாதிரிப் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் என்ற சிறப்பு பெற்றன.

அரசு நிதிஉதவி பெறும் இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் மற்றும் 27 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் மொத்தம் 32 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com