வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திமிரி பேரூராட்சியில் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமிரி பேரூராட்சியில் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைத்து வணிகா் சங்க தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏகாம்பரம், நிா்வாகிகள் ரமேஷ், பாஸ்கா், பாலகிருஷ்ணன், தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் கருணாநிதி வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு நீா் மோா், பழங்கள், குளிா்பானங்கள் வழங்கப்பட்டன. இதில் வணிகா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com