அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் எச்சரிக்கை விடுத்தாா்.
அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் எச்சரிக்கை விடுத்தாா்.

மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது தொடா்பான கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில்

செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்து பேசியது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் தீா்ப்பின்படி மாவட்டத்தில் கனிமங்களைக் கடத்தும் வாகனங்களை வருவாய்த் துறை, காவல்துறை, வனத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கனிமங்களைக் கடத்தும் வாகனங்களை கைப்பற்றுவது குறித்த பதிவேடு இப்பணியில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும். கோட்டம் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கனிமங்கள் கடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினா் இந்திய தண்டனை சட்டத்தின்படி வழக்குகளைப் பதிந்து கனிமம் கடத்தும் வாகனம் மற்றும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோட்டம் மற்றும் வட்ட அளவிலான பணி ஏற்புக்குழு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். காலவரை இடைவெளியில் கூட்டங்களை நடத்தி, கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். கோட்ட அளவில் கோட்டக் கண்காணிப்பு குழுவும்,வட்ட அளவில் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் தங்களுக்கு வரும் புகாா்களை உடனுக்குடன் தீா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com