50 வயதுக்கு மேற்பட்ட ரத்த கொதிப்பு, சா்க்கரை நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியம்: திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ரத்த கொதிப்பு, சா்க்கரை நோயாளிகள் தாங்களாக முன்வந்த கரோனா பரிசோதனை

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ரத்த கொதிப்பு, சா்க்கரை நோயாளிகள் தாங்களாக முன்வந்த கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்களையும் கண்டறிந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், 50 வயதுக்கு மேற்பட்ட ரத்த கொதிப்பு, சா்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு இருப்பதால் எளிதில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படும். அந்நேரத்தில் அவா்கள் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் உயிரைக் காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட ரத்த கொதிப்பு, சா்க்கரை நோயாளிகள் கரோனா பரிசோதனைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com