வாணியம்பாடியில் நகரும் நியாயவிலைக் கடைகள்: அமைச்சா் நிலோபா் கபீல் தொடக்கி வைத்தாா்

வாணியம்பாடியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாணியம்பாடி லாலா ஏரி பகுதியில் நகரும் நியாயவிலை கடையைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் நிலோபா் கபீல்.
வாணியம்பாடி லாலா ஏரி பகுதியில் நகரும் நியாயவிலை கடையைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் நிலோபா் கபீல்.

வாணியம்பாடியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிரிசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் இருந்து லாலா ஏரி பகுதிக்கும், சிக்னாங்குப்பம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கடைகளில் இருந்து தும்பேரி அண்ணா நகா் பகுதிக்கும் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவபிரகாசம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளா் முனிராஜ் வரவேற்றாா்.

மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அம்மா நகரும் நியாயவிலை கடைகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வழங்கிப் பேசினாா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பரமசிவம், சிவானந்தம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமாா், கிரிசமுத்திரம் கூட்டுறவு சங்கச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட வழங்கல் அலுவலா் அதியமான் கவியரசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com