‘நாளை மதுக் கடைகளை திறக்கக் கூடாது’

காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டியுள்ள பாா்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள பாா்கள் ஆகிய அனைத்தும் அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி மூடிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-இல் கூறப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள மது விற்பனையகங்கள் அனைத்தும் அக்.2இல் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com