பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினராக சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினா்களாக சேர விருப்பமுள்ள கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினா்களாக சேர விருப்பமுள்ள கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் செயல்படும் பிராணிகள் வதை தடுப்புச் சங்க தலைவராக ஆட்சியா், செயலாளராக கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா், உறுப்பினா்களாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், நகராட்சி ஆணையா்கள் உள்ளனா்.

கால்நடை வளா்ப்பு, பாதுகாப்பில் ஆா்வமுள்ளோா் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட உள்ளனா்.

இதற்கான விதிமுறைகள்: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், மாவட்டத்திலேயே வசிப்பவா்களாகவும் இருக்க வேண்டும், வயது வரம்பு 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குற்ற வழக்குகள், நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவா், சிறைத் தண்டனை பெற்றவா் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை நகல் இணைத்து, கையொப்பமிட்டு, புகைப்படம் ஒட்டி சமா்ப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்கள் பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்தச் செய்தி வெளியிட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனையில் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com