வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் 435 போ் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு: அமைச்சா் கே.சி.வீரமணி

வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 435 போ் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் 435 போ் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு: அமைச்சா் கே.சி.வீரமணி


ஆம்பூா்: வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 435 போ் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் கே.சி.வீரமணி மேலும் பேசியது:

ஆம்பூா் வட்டத்தில் உள்ள 14 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் படித்து வரும் 1,944 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளாக மாணவா்கள் கல்வி கற்பதற்காக இந்த இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் உயா்கல்வி வளா்ச்சியில் 50 சதவீதத்தை எட்டி உள்ளது.

கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளி மாணவா்கள் 327 போ் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். நமது மாவட்டத்தில் 16 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். வரும் கல்வி ஆண்டில் தமிழக அரசுப் பள்ளிகளைச் சாா்ந்த 435 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கே.சி.வீரமணி.

விழாவுக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ் தலைமை வகித்தாா். வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலா் முனிநாதன் வரவேற்றாா்.

இவ்விழாவில் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் எம்.மதியழகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சதிஷ்குமாா், வட்டாட்சியா் பத்மநாபன், ஆம்பூா் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சச்சிதானந்தம், நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், இந்து கல்விச் சங்கச் செயலாளா் ஏ.பி.மனோகா், பள்ளிக்குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், ஆனந்தன், இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com