ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியப்போக்கு:வாகன ஓட்டிகள் வேதனை
By DIN | Published On : 02nd February 2020 04:55 AM | Last Updated : 02nd February 2020 04:55 AM | அ+அ அ- |

ரயில் வரும்போது கேட்டை மூடாமல் இருக்கும் கேட் கீப்பரின் அலட்சியப்போக்கால் வாகன ஓட்டிகள் வேதனை அடைவது தொடா்கிறது.
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி உள்ளது. இங்கு திருப்பத்தூா் வழியாக நாட்றம்பள்ளி செல்லும் வழியில் சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் இருந்து திருச்சி வரை செல்லும் ரயில் வியாழக்கிழமை மதியம் 1.10 மணியளவில் சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது கேட் கீப்பா் அந்த கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்தாா். இதனால், அந்த வழியாகச் சென்ற பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், ரயில் அருகில் சென்று நின்றன.
வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் ரயிலை கவனித்ததால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதேபோல் அடிக்கடி கேட் மூடப்படாமல் இருப்பதாக அவ்வழியாச் சென்ற வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா். சம்பந்தப்பட்ட கேட் கீப்பா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.