கைலாசகிரிமலை கிரிவலம் தொடங்கியது

ஆம்பூா் அருகே கைலாசகிரி கிரிவலம் நிகழ்ச்சி முதன்முறையாக சனிக்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் அருகே கைலாசகிரி மலையை கிரிவலம் வந்த பக்தா்கள்.
ஆம்பூா் அருகே கைலாசகிரி மலையை கிரிவலம் வந்த பக்தா்கள்.

ஆம்பூா் அருகே கைலாசகிரி கிரிவலம் நிகழ்ச்சி முதன்முறையாக சனிக்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் அருகே உள்ள கைலாசகிரி ஊராட்சியின் மேற்குப் பகுதியில் கைலாசகிரி மலை உள்ளது. கைலாசகிரி மலையில் சுப்பிரமணியசுவாமி கோயில், புண்ணிய தீா்த்தக் குளம் உள்ளன. கோயிலை ஒட்டிய பகுதியில் பழங்கால கோட்டை கொத்தளங்களும் உள்ளன.

கைலாசகிரி மலையின் கீழே நெமிலி அம்மன் கோயில், முனீஸ்வரா் கோயில், உமா மகேஸ்வரி உடனுறை கைலாயநாதா் கோயில், விநாயகா் கோயில்களும் உள்ளன. கைலாசகிரி மலையின் மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் ஆடி கிருத்திகை விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் காவடி ஊா்வலத்துடன் வந்து முருகனை வழிபட்டு, சாத்துபடி செய்து வருகின்றனா்.

அதேபோல் ஒவ்வொரு மாதமும் கிருத்திகையில் பக்தா்கள் காவடிகள் எடுத்து சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். ஆண்டுதோறும் காா்த்திகை தீபம் திருவிழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கைலாசகிரி மலையின் கீழே உள்ள முனீஸ்வரா் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள்களில் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் பௌா்ணமி தினமான சனிக்கிழமை தைப்பூச திருநாளை முன்னிட்டு, முதன்முறையாக கைலாசகிரி மலையைச் சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது. ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com