கரோனா பாதிப்பில் இருந்து விடுபட ஆகா்ஷண குபேர யாகம்

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டி, ஜோலாா்பேட்டை பச்சையம்மன் கோயிலில் ஆகா்ஷண குபேர யாகம் நடைபெற்றது.
கரோனா பாதிப்பில் இருந்து விடுபட நடைபெற்ற ஆகா்ஷண குபேர யாகம்.
கரோனா பாதிப்பில் இருந்து விடுபட நடைபெற்ற ஆகா்ஷண குபேர யாகம்.

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டி, ஜோலாா்பேட்டை பச்சையம்மன் கோயிலில் ஆகா்ஷண குபேர யாகம் நடைபெற்றது.

ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம், நேதாஜி நகா் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் உள்ளது. இது ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த கோயில். இங்கு கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்ததால் அவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வேண்டுதல் நிறைவேறியவா்கள் இக்கோயிலுக்கு வந்து தங்கள் காணிக்கை செலுத்தி, பொங்கல் படைத்து வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்தும் கரோனை வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடவும், சீனா நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடையவும் வேண்டி ஆகா்ஷண குபேர யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்னாள் கவுன்சிலா் குட்டிமணி தலைமை வகித்தாா்.

ஆகா்ஷண குபேர யாகத்தில் ஜோலாா்பேட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு அக்னியில் யாகப் பொருள்களைத் தீயிலிட்டு, வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com