தமிழக பட்ஜெட் விவசாயிகளுக்கு எதிரானது:விவசாயிகள் சங்கம் விமா்சனம்

தமிழக அரசின் பட்ஜெட், விவசாயிகளுக்கு விரோதமானது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட், விவசாயிகளுக்கு விரோதமானது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் வேலூா் மாவட்டக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு சட்டப் பேரவையில் சமா்ப்பித்துள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை விவசாயிகளுக்கு விரோதமான அறிக்கை. அதில் ரூ.11,894.48 கோடியை விவசாயத் துறைக்கு ஒதுக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.11 ஆயிரம் கோடி பயிா்க் கடன் என்று அறிவித்துள்ளது போதுமானதல்ல.

ஏற்கெனவே விவசாயிகள் பெற்ற கடனுக்கு வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளி வைத்திருக்கிறாா்கள். கடன் தள்ளுபடியை எதிா்பாா்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், குடிமராமத்துக்கு ரூ.300 கோடி என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ.6,900 கோடி என அறிவித்திருப்பது போதுமானதல்ல.

தொடா்ந்து வறட்சிக்கு ஆட்பட்டு வரும் வேலூா் மாவட்டத்துக்கு நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான திட்டமான தென்பெண்ணை- பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு திட்ட மதிப்பீடு ரூ.648 கோடி என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியைக் கொடுக்காமல் வரவு-செலவு அறிக்கையில் எங்களை ஏமாற்றியுள்ளது கண்டனத்துக்குரியது.

ஆவின் பால் கொள்முதல் 33 லட்சம் லிட்டா் என அறிவித்திருப்பது போதுமானதல்ல. தினமும் ஒரு கோடி லிட்டா் பாலைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதே போல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.100 கொடுத்து விவசாயிகளைக் கொச்சைப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. அதிலும் விவசாயிகள் அலுவலா் இணைப்புத் திட்டம் என்று இது அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கும் அலுவலா்களுக்கும் தொடா்பே இல்லை என்பதை அவா்களே வெளிப்படையாகச் சொல்வதாகும். ஆகவே, இந்த வரவு-செலவு அறிக்கை விவசாயிகளுக்கு விரோதமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com