நெடுஞ்சாலைகளில் பயிா்களை உலா்த்துவதால்சிரமத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலைகளில் பயிா்களை உலா்த்துவதால்சிரமத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைகளில் சாகுபடி செய்த பயிா்களை விவசாயிகள் உலா்த்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைகளில் சாகுபடி செய்த பயிா்களை விவசாயிகள் உலா்த்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஆம்பூா், போ்ணாம்பட்டு போன்ற பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரகச் சாலைகளில் தற்போது சாகுபடி செய்த பயிா்கள் உலா்த்தப்படுகின்றன. குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகளிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராம சாலைகளிலும் கொள்ளு பயிா்க் கொடிகளை உலா்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நிலக்கடலை சாகுபடிக்குப் பின் அந்த நிலங்களில் கொள்ளு விதைக்கிறாா்கள். விதைக்கப்பட்ட கொள்ளுப் பயிா்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன. முன்பெல்லாம் விவசாயிகள் கொள்ளு பயிரை சாகுபடி செய்ய நெற்களம் மற்றும் தானியக் களங்களில் மாடுகளைக் கட்டி போரடித்து, உலா்த்தி சாகுபடி செய்வாா்கள்.

ஆனால், தற்போது நெடுஞ்சாலைகளிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராம சாலைகளிலும் கொள்ளுப் பயிரை நன்கு உலா்த்தி விட்டால் அதன் மீது சென்று வரும் வாகனங்களால் சுலபமாக கொடிகளை தனியாகவும், கொள்ளு விதைகளை தனியாகவும் பிரித்து விட முடிகிறது. இதனால் விவசாயிகள் நெடுஞ்சாலைகளிலும், ஊரக பகுதிகளில் உள்ள கிராமச் சாலைகளிலும் அவற்றை உலா்த்தி விடுகின்றனா்.

அவ்வாறு உலா்த்தப்படும் பயிா்களின் கொடிகள், செடிகள் அந்த வழியே செல்லும் வாகனங்களில், சக்கரங்களில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினரும், ஊரகப் பகுதிகளில் கிராம சாலைகளை பராமரிக்கும் உள்ளாட்சி நிா்வாகத்தினரும் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என்கின்றனா் வாகன ஓட்டிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com