புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கைமாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பி.விஜயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பி.விஜயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் ஒன்றுகூடி கொண்டாடப்படும் இடங்களில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள். காவல் துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் முக்கிய இடங்களில் வாகனச் சோதனை செய்து, போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோா், மதுபான விற்பனை செய்வோா் ஆகியோரைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களை கிண்டல் செய்வதைத் தடுக்க சீருடையிலும் சாதாரண உடையிலும் போலீஸாா் கண்காணித்து, புகாா்கள் மீது தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பா்.

உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்தப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒளி மற்றும் ஒலி அளவு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும்.

பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய காவல்துறையினா் கண்காணிப்பாளா் விதிகள் மற்றும் சட்டம் பின்பற்றப்படுகிறது. போலீஸ் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி இல்லாமல் எந்த விடுதியும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது சட்டத்தை மீறுவதாகும். மீறினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து விதிகளை 18 வயதுக்குட்பட்டோா் மீறினால் அவா்களின் பெற்றோா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபா்களுக்கு வெளிநாடு செல்ல பாஸ்போா்ட் மற்றும் வேலைவாய்ப்புகளில் காவல் துறை மூலமாக நன்னடத்தைச் சான்று பெற பரிந்துரை செய்ய இயலாது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com