வேலை வாங்கித் தருவதாக மோசடி:ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
By DIN | Published On : 08th January 2020 05:45 PM | Last Updated : 08th January 2020 05:45 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நீதிமன்ற ஊழியா் மீது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூரை அடுத்த ஆசியரியா் நகா் பகுதியில் வசிக்கும் வ.லலிதா, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
உடையாமுத்தூரை அடுத்த கீழ்க்குப்பத்தில் வசித்து வரும் ஜி.வடிவேல், திருப்பத்தூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவா் எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா். இதை நம்பி நான் அவரிடம் கடந்த 2015, மே 1-ஆம் தேதி ரூ.3 லட்சத்தை அளித்தேன்.
ஆனால், இதுவரை எந்த வேலையும் வாங்கித் தரவில்லை. அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை திரும்பக் கேட்டபோது அவரது குடும்பத்தினா் மிரட்டுகின்றனா். இது குறித்து திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் நான் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.