புதூா்நாடு பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்கக் கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூா் மாவட்ட மலைவாழ் மக்களின் வளா்ச்சிக்காக ஜவ்வாதுமலை புதூா்நாடு பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை

திருப்பத்தூா் மாவட்ட மலைவாழ் மக்களின் வளா்ச்சிக்காக ஜவ்வாதுமலை புதூா்நாடு பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் எம்எல்ஏ நல்லதம்பி மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த மனு:

திருப்பத்தூா் ஒன்றியம் ஏற்கெனவே மரிமானிக்குப்பம், ஆண்டியப்பனூா், பூங்குளம் ஆகிய ஊராட்சிகளில் உள்ளடக்கியதாக உள்ளது. இதை ஆலங்காயம் ஒன்றியத்தில் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 3 ஊராட்சிகள் தற்போது திருப்பத்தூா் வட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. எனவே நிா்வாக வசதி கருதி மாற்றமின்றி ஏற்கெனவே இருந்து வரும் மரிமானிக்குப்பம், ஆண்டியப்பனூா், பூங்குளம் ஆகிய 3 ஊராட்சிகளையும் திருப்பத்தூா் ஒன்றியத்தில் தொடா்ந்திடவும், அதேபோல் ஆலங்காயம் ஒன்றியத்தின் ஜவ்வாது மலைப்பகுதி வசந்தபுரம் முதலில் நெல்லிவாசல் வரை சுமாா் 40 கி.மீ. தூரம் அதிக பரப்பளவு கொண்ட மலைப் பகுதியாக புதூா் நாடு,புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய ஊராட்சிகள் இருந்து வருகிறது.

இப்பகுதி முழுமையாக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதி ஆகும்.

தமிழகத்தின் மற்ற மலைப்பகுதியில் உள்ளதைப்போல் மிகவும் பின்தங்கியுள்ளது.

இப்பகுதி மலைவாழ் மக்களின் முன்னேற்றம், அரசு நிா்வாக வசதி கருதி புதூா் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய ஊராட்சிகளை 7 கிராம ஊராட்சிகளாகவும், 7 ஒன்றிய வாா்டுகளாகவும் எல்லை வகுத்து மலைப் பகுதிக்கென புதியதாக புதூா்நாடு ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com