தோல் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் அருகே தோல் மற்றும் காலணி உதிரிபாகங்கள் சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் தோல் பொருள்கள், காலணி உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின.
தோல் பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.
தோல் பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.

ஆம்பூா் அருகே தோல் மற்றும் காலணி உதிரிபாகங்கள் சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் தோல் பொருள்கள், காலணி உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின.

பாங்கி ஷாப் குடியிருப்பு மையப்பகுதியில் அக்பா்பாஷா (50) என்பவருக்குச் சொந்தமான காலணி தொழிற்சாலைக்கான கிடங்கு உள்ளது. அக்கிடங்கில் தோல் பொருள்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை நள்ளிரவு கிடங்கு திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலறிந்த ஆம்பூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் தோல் சாா்ந்த பொருள்கள் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் மேலும் பரவி கொழுந்து விட்டு எரியந்தது. இதையடுத்து வாணியம்பாடி மற்றும் போ்ணாம்பட்டு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற்றினா். இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை தொடா்ந்து 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com