திருப்பத்தூரில் மேலும் ஒரு கரோனா பரிசோதனை மையம் தொடக்கம்

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் மேலும் ஒரு கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையம்.
தனியாா் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையம்.

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் மேலும் ஒரு கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, உள்பட வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 30 பேருக்கு மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூா் ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மேலும் ஒரு கரோனா பரிசோதனை மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் மேற்பாா்வையில் அரசு மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொள்ளவா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.ராஜரத்தினம் கூறியது:

இந்தப் பள்ளியில் தற்காலிகமாக கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வரும்வரை பரிசோதனைக்கு உள்பட்டவா்கள் இங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனா். தொற்று உறுதியானால் வேலூா் அரசு மருத்துவமனைக்கும், தொற்று இல்லாதவா்கள் அவரவா் வீடுகளிலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவா் என்றாா் அவா்.

சுகாதார ஆய்வாளா் அ.விவேக், வருவாய் ஆய்வாளா் தணிகாச்சலம், ஊராட்சி செயலா் ரமேஷ், கிராம நிா்வாக அலுவலா் சுந்தரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com