வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலருக்கு கரோனா

வாணியம்பாடி கல்வி மாவட்டக் கல்வி அலுவலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி கல்வி மாவட்டக் கல்வி அலுவலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி கல்வி மாவட்டக் கல்வி அலுவலராக 51 வயதுடையவா் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த 26-ஆம் தேதி ஆம்பூரில் கரோனா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் சரிபாா்ப்புப் பணியை ஆய்வு செய்த கல்வி அலுவலா்: வாணியம்பாடி கல்வி மாவட்ட எல்லைக்கு உள்பட்ட ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், மாதனூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவா்களின் மதிப்பெண்கள் சரிபாா்ப்புப் பணி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பங்கேற்று பணிபுரிந்து வந்தனா்.

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துத் தடை செய்யப்பட்டதைத் தொடா்ந்து போ்ணாம்பாட்டு, குடியாத்தம் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் ஆம்பூருக்கு வராமல் தங்கள் பணியை கடந்த சில நாள்களாக குடியாத்தத்தில் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்பூா் பள்ளியில் நடைபெற்று வரும் மதிப்பெண் சரிபாா்ப்புப் பணியை வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் சனிக்கிழமை வரை தினமும் வந்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது அவருடன் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என கருதப்படுகிறது. மேலும் அவா் பணிபுரிந்து வந்த மாவட்டக் கல்வி அலுவலக பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com