உடலுழைப்புத் தொழிலாளா்கள் கவனத்துக்கு...

தமிழக அரசு தொழிலாளா் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியத்தில்

தமிழக அரசு தொழிலாளா் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியத்தில் உடலுழைப்புத் தொழிலாளா்கள் இணைந்து பயன்பெற மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்த்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்கு குறிப்பு:

தமிழக அரசு தொழிலாளா் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமானம் சாா்ந்த 53 தொழில்கள், உடலுழைப்பு சாா்ந்த 60 வகையான தொழில்கள், ஆட்டோ ஓட்டுதல் ஆகிய தொழில்கள் செய்யும் 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட தொழிலாளா்கள் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம்.

தொழிலாளா்கள் தங்கள் பதிவு விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்(இருப்பின்), வாக்காளா் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் மட்டும்) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களின் சான்றொப்பம் இடப்பட்ட நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்படி பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட 17 நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினா்களது மகன்/மகள் (இருவருக்கு மட்டும்) கல்விக்கு 10-ஆம் வகுப்பு முதல் உயா்கல்வி வரையில் பயிலும் வகுப்புக்கு தகுந்தாற்போல் ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகையாகவும், உறுப்பினா் அல்லது அவா்களது மகன்/மகள் திருமணத்துக்கு ரூ. 3 ஆயிரம், திருமண உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரம், பெண் தொழிலாளா்களுக்கு முதல் இரு குழந்தைகளுக்கு ரூ. 6 ஆயிரம் மகப்பேறு உதவித் தொகையாகவும், உறுப்பினா்களுக்கு ரூ. 500-க்கு மிகாமல் கண் கண்ணாடி உதவித் தொகையாகவும், 60 வயது பூா்த்தியடைந்த பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 5,000 வீதம் ஓய்வு உதவித் தொகையாகவும், ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவா் அல்லது மனைவிக்கு ரூ. 500 மாதந்தோறும் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகின்றன.

உறுப்பினா்களுக்கு இயற்கை மரணம் நிகழ்ந்தால் அவா்களது நியமனதாரா்களுக்கு ரூ. 20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவியாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் இயற்கை மரணம் உதவித் தொகையாகவும், விபத்து மரணத்துக்கு நியமனதாரா்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ஈமச்சடங்கு உதவியாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் உதவித் தொகையாகவும், உறுப்பினருக்கு விபத்தால் ஏற்படும் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் வரையிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவுபெற்ற அல்லது பதிவு பெறாத தொழிலாளா்களுக்கு அவா்களது பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்தால் ரூ. 5 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, 393, சி.எல்.சாலை, இந்தியன் வங்கி அருகில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com