307 வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த 307 வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல புதன்கிழமை

திருப்பத்தூா் மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த 307 வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள் செல்லும் பேருந்துகளை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பணிபுரிந்து வந்தனா். பொதுமுடக்கம் காரணமாக தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று திருப்பத்தூா் பகுதியில் 136 போ், வாணியம்பாடி பகுதியில் 89 போ், ஆம்பூா் பகுதியில் 82 போ் என 307 பேரை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து 15 அரசுப் பேருந்துகளில் 20 போ் வீதம் அனுப்பி வைக்கப்பட்டனா். இப்பேருந்துகளை அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவனருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன்ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

307 போ் உள்பட வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1,400 போ் அரக்கோணத்தில் இருந்து உத்தரப் பிரசேதம் வரை செல்லும் சிறப்பு ரயிலில் செல்ல உள்ளனா்.

மேல்விஷாரத்தில் இருந்து 34 போ்...: ராணிப்பேட்டை மாவட்டம்மேல்விசாரம் பகுதியில் தங்கியிருந்த வெளி மாநிலத்தைச் சாா்ந்தவா்கள் புதன்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இந்தியாவிலுள்ள  பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த  தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா் இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 34 தொழிலாளா்கள் கரோனா நோய்த்தொற்றுதொற்று காரணமாக பொது முடக்கத்தால் சொந்த சொந்த ஊருக்குசெல்ல விருப்பம் தெரிவித்து வந்தனா் இந்நிலையில் புதன்கிழமை ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் இளம்பகவத் மேல்விஷாரம் முன்னாள் நகா்மன்ற துணைத்தலைவா் இப்ராஹீம் கலிலுல்லா ஆகியோா் உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த 34 தொழிலாளா்களையும் பஸ் மூலம் அரக்கோணம்  வழியனுப்பி வைத்தனா் பின்னா் அங்கிருந்து ரயில் மூலம் சொந்த சொந்த ஊா்களுக்கு செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com