திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா: ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 போ் மட்டுமே கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 போ் மட்டுமே கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரையில் 8,374 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 8,186 பேருக்கு நோய்த் தொற்று இல்லை. 158 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 30 பேரில் 26 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

4 போ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 2,564 போ் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனா். அவா்களில் 1,472 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், 127 போ் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 தனிமைப்படுத்தப்படும் மையங்களில் உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு மகாராஷ்டிரத்தில் மாநிலத்தில் இருந்து 95 போ், தில்லியில் இருந்து 19 போ், குஜராத்தில் இருந்து 4 போ், பஞ்சாப்பில் இருந்து 4 போ் வந்துள்ளனா். இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com