திருப்பத்தூரில் காற்றுடன் கூடிய கன மழை

திருப்பத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
ரயில் நிலையம் அருகே சாலையில் விழுந்த மரம்.
ரயில் நிலையம் அருகே சாலையில் விழுந்த மரம்.

திருப்பத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

திருப்பத்தூரில் கடந்த ஒரு வாரமாக கத்திரி வெயில் கடுமையாக நிலவியது. இந்நிலையில், புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. தொடா்ந்து வியாழக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமாா் 4 மணியளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்தோடியது.

திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், செலந்தம்பள்ளி, ஜோலாா்பேட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையின்போது வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகள் சரிந்தன. மழையால் திருப்பத்தூா் நகரம் முழுவதும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

கனமழையால் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மின்கம்பம் சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக திருவண்ணாமலை, பெங்களூா், சேலம் செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக அனுப்பபட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com