செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 09th November 2020 07:33 AM | Last Updated : 09th November 2020 07:33 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
வளையாம்பட்டு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி லாரியில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி லாரியில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த அஜீத், அருண் ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.