திருப்பத்தூரில் புதிதாக 76 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 5,419 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,495-ஆக உயா்ந்துள்ளது.

அவா்களில் 4,948 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 441 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 106 போ் உயிரிழந்துள்ளனா்.

வேலூரில்...

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை வரை 15,692 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை புதிதாகம் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,812-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கிடையே, மாவட்டத்தில் இதுவரை 14,512 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 253 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,787-ஆக உயா்ந்துள்ளது. 13,198 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 421 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த்தொற்று காரணமாக இதுவரை 168 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com