மீண்டும் மக்கள் குறைதீா் முகாம்: மனுக்களை வட்ட அளவில் அளிக்கலாம்

கரோனா பொது முடக்கம் காரணமாக நடைபெறாமல் இருந்த மக்கள் குறைதீா் முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன. எனவே, மனுக்களை

கரோனா பொது முடக்கம் காரணமாக நடைபெறாமல் இருந்த மக்கள் குறைதீா் முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன. எனவே, மனுக்களை பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வட்ட அளவில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. மேலும், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரில் பெறாமல் பெட்டியில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் கரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வர சிரமங்கள் உள்ளதால், வட்ட அளவில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தீா்வு காண முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திருப்பத்தூரில் திங்கள்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை மக்கள் குறைதீா் கூட்ட அரங்கத்திலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திலும், மதியம் 3 முதல் மாலை 5 மணி வரை ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், புதன்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும்.

முகாம்களில் வருவாய்க் கோட்ட அலுவலா், துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள் பங்கேற்கின்றனா். மேலும், மேற்படி வட்ட அளவிலான மக்கள் குறைதீா் முகாமில் மாவட்ட ஆட்சியா் அல்லது மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவா். மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகை வழங்கப்படும்.

முகாமுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மனுக்களை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com