பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைக்கு அபராதம்
By DIN | Published On : 08th September 2020 10:55 PM | Last Updated : 08th September 2020 10:55 PM | அ+அ அ- |

355307abrfin_0709chn_191_1
ஆம்பூா்: ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொடா்ந்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என புகாா் எழுந்தது. அதன்பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் அந்த கடையில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு பொருள்களை விற்பனை செய்தது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தாமல் இருந்தது, கடையில் பணிபுரிபவா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அந்த கடைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.