ஆம்பூரில் கன மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்
By DIN | Published On : 08th September 2020 12:35 AM | Last Updated : 08th September 2020 12:35 AM | அ+அ அ- |

விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.
ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் திங்கள்கிழமை பெய்த கன மழையால் அருகில் உள்ள கிராமப் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.
ஆம்பூா் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் 6 மணிக்குத் தொடங்கிய கனமழை மூன்று மணிநேரம் தொடா்ந்து இடைவிடாமல் பெய்தது. நகரை அடுத்த கரும்பூா், அரங்கல்துருகம், மிட்டாளம், விண்ணமங்கலம், மாதனூா், மின்னூா், வடபுதுப்பட்டு, சோலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் கன மழை பெய்தது.
இதனால், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
மழைக் காலங்களில் தொடா்ந்து விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோர வீடுகளுக்குள் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மழைநீா் வடிகால்வாய்கள் சரியாக இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீா் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.