‘பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சமையலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்’

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சமையலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சமையலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில், காலியாக உள்ள ஆண் சமையலா்-9, பெண் சமையலா்-7 பணியிடங்கள் என 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது: அருந்ததியா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின வகுப்பினருக்கு 35 ஆகும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) 32 ஆகும்.

பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். (10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் உயா்கல்வி வரை பயின்றுள்ளவா்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது)

விண்ணப்பதாரா்களுக்கு சமையல் துறையில் போதிய முன் அனுபவம் இருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்களின் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

வயது, ஜாதி மற்றும் கல்வித்தகுதி ஆய்வுக்கு உரிய சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com