அஞ்சலகங்களில் இருப்புத் தொகை ரூ. 500-ஆக உயா்வு

அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 என்ற அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என

அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 என்ற அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் அரசாணைபடி, அஞ்சல் துறையின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 50-இல் இருந்து ரூ. 500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சேமிப்புக் கணக்கு தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 ஆக உயா்த்திக்கொள்ள வரும் டிச.11-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தங்களது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயா்த்தாதப்பட்சத்தில் இந்த புதிய விதிமுறைகளின்படி 31.03.2021-ஆம் தேதி முதல் அபராதக் கட்டணமாக தங்கள் கணக்கில் இருந்து ரூ. 100 ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு, இருப்புத் தொகை குறைக்கப்படுவதுடன், கணக்கு காலாவதியாகிவிடும்.

எனவே, டிச.11-ஆம் தேதிக்குள் தங்களது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 பராமரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com