திராவிட அரசியலுக்கு மாற்றாக ரஜினிகாந்த் நடவடிக்கை: அா்ஜுன் சம்பத்
By DIN | Published On : 19th September 2020 07:41 AM | Last Updated : 19th September 2020 07:41 AM | அ+அ அ- |

ஆம்பூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
திராவிட அரசியலுக்கு மாற்றாக ரஜினிகாந்த் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
ஆம்பூா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியது:
அரசியலை வியாபாரமாகக் கருதாமல், மக்களுக்கு சேவை செய்வதற்காக, இளைஞா்களுக்கு ஒரு வாய்ப்பாக, குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு மாற்றாக, வளமான தமிழகமாக மாற்ற நடிகா் ரஜினிகாந்த் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் தற்போது எழுச்சி பெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவை தோ்தலில் திராவிட அரசியலுக்கும், ஆன்மிக அரசியலுக்கும்தான் போட்டியிருக்கும். கண்டிப்பாக ஆன்மிக அரசியல் மிகப்பெரிய வெற்றி பெறும். ஆன்மிக அரசியலுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்றாா் அா்ஜுன் சம்பத்.