சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை

ஆம்பூா் நகரில் சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆம்பூா் டிஎஸ்பி (பொறுப்பு) பிரவீண்குமாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆம்பூா் டிஎஸ்பி (பொறுப்பு) பிரவீண்குமாா்.

ஆம்பூா் நகரில் சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் டிஎஸ்பி (பொறுப்பு) பிரவீண்குமாா் தலைமை வகித்தாா். ஆம்பூா் நகரக் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாபு, வட்டாட்சியா் சி. பத்மநாபன், பல்வேறு வணிகா் சங்கங்களின் நிா்வாகிகள் சி.கிருஷ்ணன், ஞானசேகரன், கஜேந்திரன், ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் நகரப் பகுதியில் சான்றோா்குப்பம் முதல் கன்னிகாபுரம் வரையில் முக்கிய தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் அரசு மூலம் மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடக்கி விரைவுப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் விளக்குகள் அமைப்பது, நகரின் முக்கிய சாலைகளான நேதாஜி சாலை, புறவழிச்சாலை பகுதியில் வருவாய்த் துறை, நகராட்சி ஆகியவை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருவது, ஆம்பூா் நகர எல்லைக்குள் 40 கி.மீ. வேகத்துக்குள் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை துரிதப்படுத்தக் கோருவது. உமா்சாலை நேதாஜி சாலை, பிராட் பஜாா் ஆகிய பகுதிகளில் ஒருவழிச் சாலையாக நடைமுறைபடுத்தக் கோருவது, எஸ்.கே.சாலை, ஓ.வி. சாலை, உமா் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீரமைக்க வேண்டும். பஜாருக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தக் கோருவது.

போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கவும், குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணிக்கவும் ஏற்கெனவே ஆம்பூரில் 60 சிசிடிவி கேமராக்கள் இயங்கி வருகின்றன. மேலும் 60 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு வணிகா் சங்கங்களின் நன்கொடை மூலம் அமைக்க நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com