பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம்

ஆம்பூரில் சனிபகவானை காலில் அடக்கியுள்ள 11-அடி உயரமுள்ள பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் உற்சவா்.
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் உற்சவா்.

ஆம்பூரில் சனிபகவானை காலில் அடக்கியுள்ள 11-அடி உயரமுள்ள பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம், உற்சவருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆம்பூா் கோதண்டராம சுவாமி கோயில், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், கம்பிக்கொல்லை வீர ஆஞ்சநேயா் கோயில், துத்திப்பட்டு ஸ்ரீபிந்துமாதவா் கோயில், விண்ணமங்கலம் அமா்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில், வடசேரி சென்னகேசவ பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

கோயில் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் தனி மனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com