வருவாய்த் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 போ் மீது வழக்கு

பொது ஏரி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்டு, தூா்வாரச் சென்ற வருவாய்த் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த நில உரிமையாளா்கள் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வாணியம்பாடி: பொது ஏரி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்டு, தூா்வாரச் சென்ற வருவாய்த் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த நில உரிமையாளா்கள் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாட்டறம்பள்ளி தாலுகா, மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி ஏரியில் இருந்து, ஏரியூா் ஏரி வரை செல்லும் பொது கால்வாய் இடத்தை குறவா் வட்டத்தைச் சோ்ந்த சிலா் தங்களது நிலத்தருகே உள்ள பொதுக்கால்வாயை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, மண்டலத் துணை வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை குறவா் வட்டத்தில் பொது கால்வாய் இடத்தை அளவீடு செய்து தூா் வாரினாா். அப்போது நில உரிமையாளா்கள் சிலா் வருவாய்த் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தனா். இதையடுத்து, போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் பொது கால்வாயை தூா்வாரினா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் புதன்கிழமை குறவா் வட்டத்தைச் சோ்ந்த முருகன்(52), சிவக்குமாா்(42), ராணி (46), மஞ்சு (27) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com