பாஜக சாா்பில், வாணியம்பாடி பூக்கடை பஜாா் வரசித்தி விநாயகா் கோவில் அருகே தேசிய அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தில் இலவச பதிவு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர பாஜக இளைஞரணி தலைவா் காா்த்திக் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் இலவசமாக பதிவு செய்து கொண்டனா். வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளா் வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் வாசுதேவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், நகர பாஜ தலைவா் காா்த்திக்கேயன் உள்ளிட்டோா் திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.