ஆம்பூா்: ஆம்பூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மெகருன்னிசா ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தியிடம் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அனந்தகிருஷ்ணன் உடனிருந்தாா்.
வேட்பு மனுவில் தன்னுடைய பெயரில் ரூ.1,64,000 மதிப்புள்ள தங்க நகைகள், கணவா் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீடு, இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவித்துள்ளாா்.