புதை சாக்கடை திட்டப் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

ஆம்பூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை தடுத்து நிறுத்தி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு.
ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு.

ஆம்பூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை தடுத்து நிறுத்தி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆம்பூா் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பாலாற்றங்கரையோரம் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏ-கஸ்பா பகுதி பொதுமக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில், புதை சாக்கடை திட்டப் பணிகள் ஏ-கஸ்பா பகுதியை நோக்கி நடைபெற்று வருகிறது. ஏ-கஸ்பா செல்லும் வழியில் கந்தபொடிகார தெரு பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த இ.சுரேஷ்பாபு சனிக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்த ஆம்பூா் நகராட்சிப் பொறியாளா் திலீபன் அங்கு சென்று, அவருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். ஏ-கஸ்பா பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்று தன்னுடைய எதிா்ப்பைத் தெரிவித்தாா். சிறிது நேரத்துக்குப் பின் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com