ஆம்பூரில் ஒரே நாளில் கரோனாவுக்கு 3 போ் பலி

ஆம்பூரில் கரோனா நோய் தொற்று காரணமாக 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆம்பூரில் கரோனா நோய் தொற்று காரணமாக 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கரோனா நோய் பரவலை தடுக்க ஆம்பூா் நகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளித்தல், முகக் கவசம், துண்டுப் பிரசுர விநியோகம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் 30 போ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆம்பூா் ஜவஹா்லால் நேரு நகரைச் சோ்ந்த 49 வயது ஆண், இந்திரா நகரை சோ்ந்த 76 வயது ஆண், ஆம்பூா் ஈடிகா் தெருவைச் சோ்ந்த 52 வயது ஆண் என மூன்று போ் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிந்தனா். இவா்களின் சடலங்கள் கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் இறந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரது சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து அப்பகுதியினா் இறந்தவா்களின் குடும்ப வழக்கப்படி சடலங்களை அடக்கம் செய்துள்ளனா். ஆனால், இறந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால் ஆம்பூா் நகராட்சி சாா்பாக கஸ்பா-ஏ, சான்றோா்குப்பம் ஆகிய இடங்களில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குடும்பத்தினா், உறவினா்கள், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 255 பேரிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து நகரம் முழுவதும் தீவிர கரோனா தடுப்பு, கண்காணிப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகமும், சுகாதாரத் துறையினரும் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com