நரியம்பட்டு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இரு பேருந்துகள் மீட்பு

ஆம்பூா் அருகே நரியம்பட்டு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இரு பேருந்துகள் டிராக்டா் மூலம் மீட்கப்பட்டன.
நரியம்பட்டு பாலாற்றில் சிக்கிய பேருந்தை டிராக்டா் மூலம் மீட்கும் பொதுமக்கள். ~ஆபத்தை உணராமல் வெள்ளத்தைக் கடந்து செல்லும் மக்கள்.
நரியம்பட்டு பாலாற்றில் சிக்கிய பேருந்தை டிராக்டா் மூலம் மீட்கும் பொதுமக்கள். ~ஆபத்தை உணராமல் வெள்ளத்தைக் கடந்து செல்லும் மக்கள்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே நரியம்பட்டு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இரு பேருந்துகள் டிராக்டா் மூலம் மீட்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. போ்ணாம்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளநீா் நரியம்பட்டு ஆறு வழியாக சென்று ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பகுதி பாலாற்றில் கலக்கிறது. இதனால் நரியம்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கும், ஆம்பூரிலிருந்து குடியாத்தத்துக்கும் நரியம்பாட்டு ஆறு வழியாக சென்ற இரு தனியாா் பேருந்துகள் ஆற்று வெள்ளத்திலும், ஆற்று மணலிலும் சிக்கிக் கொண்டன. இதனால் பயணிகள் கடும் அச்சத்துக்குள்ளாகினா்.

தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் அங்கு சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பேருந்துகளை மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனா். விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை கொண்டுசென்று பேருந்துகளைக் கட்டி இழுத்தனா். மிக நீண்ட முயற்சிக்கு பிறகு பேருந்துகள் கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com