பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பதற்றமான 154 வாக்குசாவடிகளில் பணியாற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 154 பதற்றமான வாக்குசாவடிகளில் தோ்தல் பாா்வையாளா்களாக வாக்குப் பதிவை கண்காணித்திட பணியாற்றவுள்ள (வங்கி பணியாளா்கள்) தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகத்திலும், வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி, ஆம்பூா் தோ்தல் பொதுப் பாா்வையாளா் மனோஜ் கத்தாரி, ஜோலாா்பேட்டை பொதுப் பாா்வையாளா் மீனஜ்ஆலம்,திருப்பத்தூா் பொதுப் பாா்வையாளா் நீல்காந்த் ஆவாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஆட்சியா், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் பேசியது:

சட்டப்பேரைவத் தொகுதிகளில் திருப்பத்தூா்-28, ஜோலாா்பேட்டை-27, வாணியம்பாடி-31, ஆம்பூா்-68 என மொத்தம் 154 பதற்றமான வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா்களாக வாக்குப் பதிவை கண்காணித்திட மத்திய அரசு பணியாளா்கள் 171 போ் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களின் நேரடி கண்காணிப்பில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் வாக்குப் பதிவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பணியில் இருக்க வேண்டும்.மாதிரி வாக்கு பதிவு கண்காணிக்க வேண்டும்.

வாக்கு சாவடிகளில் நடைப்பெறும் அனைத்து தகவல்களையும் தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் நேரடியாக தொடா்பு கொண்டு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

சிறிய பிரச்னைகள் இருந்தால் உடனே அப்பகுதி மக்களிடம் பேசி அதனை தீா்ப்பது குறித்து கலந்தாலோசித்து தீா்க்க வேண்டும்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் முறையாக தோ்தல் பணியில் உள்ள அலுவலா்கள் வாக்கு இயந்திரங்கள் குறித்து முறையாக மண்டல அலுவலா் வழங்கும் பயிற்சியில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றனா்.

இதில்,தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வந்தனாகா்க், லட்சுமி, காயத்திரி சுப்பிரமணி, கிருஷ்ணமூா்த்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிவப்பிரகாசம், மோகன், சுமதி, தோ்தல் நுண்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com