சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிப்பு

நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் பகுதி அருகே சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் பகுதி அருகே சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நாட்டறம்பள்ளி பிரதான சாலை பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. அதன் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் உள்ளது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் கோயில் நுழைவுவாயில் எதிரே கடந்த வாரம் சாலையின் நடுவே சாலை பகுப்பான் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் நுழைவு வாயில் எதிரே சாலை பகுப்பான அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கோயில் நுழைவு வாயில் எதிரே சாலையின் நடுவே தடுப்பு ஏற்படுத்திவிட்டால், பள்ளிக் குழந்தைகள் சாலையை சுற்றிவந்து பள்ளிக்குச் செல்ல சிரமமாக இருக்கும், கோயிலுக்குச் செல்லும் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும், எனவே கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com