ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஆம்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ரயில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.

ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா்கள் மேகராஜா, சௌந்தர்ராஜன், காவலா் ரமேஷ் குமாா் ஆகியோா் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் ரயிலில் சோதனை செய்தனா். அப்போது பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. அதன் பேரில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com