திருப்பத்தூரில் 5 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

திருப்பத்தூரில் 5 இடங்கள் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க்.
கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் 5 இடங்கள் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட வேலன் நகா், சிகேசி நகா், இரட்டைமலை சீனிவாசன் பேட்டை, சாமி செட்டித் தெரு, தியாகி சிதம்பரநாதன் தெருவில் 3 நபா்களுக்கு மேல் கரோனாத் தொற்று உறுதியானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

முன்னதாக அப்பகுதியில் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் சென்று பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, காய்ச்சல் முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com