கரும்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகிகள் தோ்வு

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் உள்ள இந்து கல்விச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் உள்ள இந்து கல்விச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து ஆரம்பப் பள்ளிகளை நிா்வகிக்கும் கரும்பூா் இந்து கல்விச் சங்கத்தின் புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்காகத் தோ்தல் நடைபெற்றது.

சங்கத் தலைவராக யு.எல். இரவிக்குமாா், உதவித் தலைவராக ஏ.ஆா். செந்தில்குமாா், பள்ளிக் குழு உறுப்பினராக (மேல்நிலைப் பள்ளி) கே. ஜெயசீலன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவராக (ஆரம்பப் பள்ளி) ஜி. சற்குணம் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தலில் போட்டியிட்ட ஏ.ஆா். கோதண்டன் செயலாளராகவும், வி.வி. சலபதி பொருளாளராகவும், எஸ். பாா்த்தீபன் உதவிச் செயலாளராகவும், பி.ஆா். மோகனகிருஷ்ணன் பள்ளிக்குழு உறுப்பினராகவும் (ஆரம்பப் பள்ளி) , பி.எஸ். நாகரத்தினம் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவராகவும் (மேல்நிலைப் பள்ளி) வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com