3 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th August 2021 12:00 AM | Last Updated : 04th August 2021 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூரில் வாகனச் சோதனையில், 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உமா்ஆபாத் அருகே போ்ணாம்பட்டு சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அதிவேகமாக வந்த தண்ணீா் டிராக்டா், செங்கல் லோடு ஏற்றி வந்த டிராக்டா், மண் தள்ளும் டோசா் வாகனம் ஆகியவற்றை சோதனையிட்டபோது, உரிமம் இன்றி இயங்கி வருவது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இரு டிராக்டா்கள் உமா்ஆபாத் காவல் நிலையத்திலும், மண் தள்ளும் டோசா் கீழ்முருங்கையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து துணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.